Sunday, February 13, 2022

Importance of Foot Care for Diabetic Patients

 When diabetic foot problems go ignored, they can lead to a limb-threatening situation. Diabetic patients must take extra precautions to keep their feet free of problems.

    Blood sugar levels rise as a result of diabetes. Peripheral neuropathy is a condition in which excessive blood sugar damages the nerves in the feet. Increased foot pressure followed by callosity and ulcer may develop in that later on. Infection is more likely when nerve damage is accompanied with poor circulation.

Diabetic Foot Care

A person's feet may lose sensation as a result of damaged nerves. Due to an ill-fitting shoe, he may not detect he has a blister. She might not even know she has a little cut on her foot from stamping around the yard barefoot. Due to a lack of circulation, these little lesions on the foot will not heal quickly. If not dealt with properly, they can quickly grow into severe foot ulcers.

On a daily basis, diabetics must look after their feet. On a daily basis, they should examine their feet for blisters, cuts, and other lesions. To avoid infection, scrub each foot thoroughly, giving special attention to the spaces between the toes.

Diabetic Foot Care

👉Foot Hygiene is Essential on a Daily Basis.

Here Are Some Daily Foot Care Routines to Follow

1. Examine your feet first.

Examine the tops, edges, bottoms, heels, and the space between your toes on your foot and toes. Use a mirror or seek assistance if you are physically unable to examine your own feet. Any rashes, inflammation, cuts, blisters, or wounds should be reported to your doctor right away.

2. Take a foot bath.

Wash your feet every day with normal or cold water and a gentle soap. Hot water and harsh soaps might harm your skin. Before placing your feet in, feel the water with NOT your fingers BUT WITH YOUR elbows. It may be difficult for you to feel the temperature of the water with your  feet AND with your hands if you have diabetes. Neuropathy affects both the hands and feet.

3. Make sure your feet are moist by applying moisturizer daily preferably after taking bath and make sure they are completely dry in between the toes. Fungus thrives in damp environments, so make sure the region between your toes is completely dry.

4. Apply moisturizer to dry skin from leg to foot

Use moisturizer or non edible oil if your feet ' skin is rough or dry. 

If you have diabetes and are experiencing foot sores, call your healthcare professional right once. For more visit www.footspecialistindia.com

Contact Us
Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Usmaduraifootcarecentre@gmail.com

Sunday, January 31, 2021

கால் புண்ணால் மருத்துவ செலவுகள் அதிகமா? அதை உடனே சரி செய்ய வாங்க ... மதுரை சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையத்திற்கு.

Foot ulcer என்று அழைக்கப்படும் பாதப் புண் ஆனது பாலின வேறுபாடு இல்லாமல் சர்க்கரை நோயாளிகளை தாக்கக் கூடிய நோயாகும்.

உலக அளவில் சுமார் 10 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கால் புண்கள் ஏற்பட பொதுவாக நரம்பு பாதிப்பு மற்றும் இரத்த குழாய்களில் அடைப்பு என்று கூறப்பட்டாலும் முக்கியமான காரணியாக இருப்பது என்னவென்றால் பாதத்தில் ஏற்படும் உராய்வு, அழுத்தம் மற்றும் காயங்கள் தான்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறிய புண் அல்லது காய்ப்பு போன்று துவங்கி பின் உணர்வு இல்லாத காரணத்தினாலும் கவனிக்கப்படாமல் இருப்பதாலும் மிக விரைவிலேயே புண்களில் சீழ் கட்டத் துவங்கி எலும்பு வரை ஊடுருவி செல்வதால் பாதத்தை இழக்கக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம்.

சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு, கால் எரிச்சல், மதமதப்பு, கால் வலி இருந்தால்‌ நரம்பு பாதிப்பின் அடையாளமாக இருக்கும்.அந்த வகை பாதங்களில் புண் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

மேலும் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளாத நோயாளிகளின் நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைவாகவே (immunopathy) காணப்படும்.

இதனால் இம்மாதிரியான பாதப் புண்களில் பாக்டீரியா கிருமிகளின் வளர்ச்சி மிகவும் வீரியமாக இருக்கும்.

கால் புண்களுக்கான அறிகுறிகள்:

  • பாத வலி
  • பாத வீக்கம்.
  • தோலில் சிவந்த நிறம் மற்றும் வெப்பத்தன்மை.

கால் புண் பாதிப்பை தடுக்கும் வழிகள்:

1. தினமும் உங்கள் பாதங்களை பார்த்து பராமரிக்க வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுதல்.

3. கால் நகங்களை நேராக வெட்ட வேண்டும்.

4. குளிர்ந்த நீரில் தினமும் கால்களை கழுவ வேண்டும்.

5. சூடான தரையில் செருப்பில்லாமல் நடக்கக்கூடாது.

6.உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்.

கால் புண்ணிற்கான பரிசோதனை முறைகள்:

👌.கால் நரம்புகளின் செயல் திறனை கண்டுபிடிக்க (Biothesiometry) பாத உணர்வை கண்டறியும் கருவி பயன்படுகிறது.

👌.கால் ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்புகளைக் கண்டறிய டாப்லர் ஸ்கேனும்(Doppler) மற்றும் ஆஞ்சியோகிராம் (peripheral angiogram) பயன்படுத்தப்படுகிறது.

👌.இரத்த சோதனைகள் மற்றும்

காயம் பரிசோதனை.

👌.எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் மற்றும்

எக்ஸ்–ரே கதிர்கள்.

மேற்கூறிய கால் புண் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் தயங்காமல் எங்கள் மருத்துவமனையை அணுகினால் நிச்சயமாக உங்கள் கால் புண்ணிற்கு தீர்வு கிடைக்கும்.

நீங்கள் செய்யும் அதிக செலவீனங்களில் இருந்து விடுதலை பெறுவதோடு நோயின் தாக்கத்தில் இருந்தும் காக்கப்படுவீர்கள்.

நம்பிக்கையுடன் வாருங்கள். நிச்சயம் பயன் பெறுவீர்கள்.

Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcarecentre@gmail.com

Friday, December 18, 2020

நீரிழிவு நரம்பு கீழ்வாதம் (அ) நரம்பு, எலும்பு மற்றும் மூட்டு நோய்

நீரிழிவு நரம்பு கீழ்வாதமானது, எலும்பு சிதைவின் ஓர் வகையே சார்கோட் நோய் (Charcot foot) என்று அழைக்கப்படுகிறது.

எலும்பு தேய்மானம் என்றும் வைத்து கொள்ளலாம்.

இது எந்த வகையான பிரச்சினைகளினாலும் நரம்பு பாதிப்பு வந்த நோயாளிகளுக்கு மட்டுமே வரக் கூடிய ஒரு கொடிய நோய்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பு காரணமாக கால்கள் மற்றும் பாதங்களில் உணர்வு குறைந்து காணப்படும்.

பாதங்களில் உள்ள எலும்புகள், மூட்டுகள் மற்றும் மென்மையான திசுக்களில் நரம்பு பாதிப்பால் இரத்த குழாய்களில் மாற்றம் ஏற்பட்டு அதனால் ஒரு சுனாமி பேரலை போன்று பாதங்களில் ஒரு வித அரிப்பு தன்மையை ஏற்படுத்தி எலும்புகள் தேய்மானம் அடையும்.

அவ்வாறு திடம் இல்லாத எலும்புகளில் முறிவு ஏற்பட்டு மற்றும் அதன் கட்டமைப்பு மாறி எலும்பு மாவு போல் மாற்றம் அடைந்து பாதம் கோணலாகி விடுகிறது.மேலும் இது பாதத்தின் வடிவத்தை நிரந்தரமாக மாற்றும் தன்மை கொண்டது.

நீண்ட நாட்கள் இருக்கும் நீரிழிவு நோயில் திடீர் என்று பாதங்கள் வழக்கத்தை விட கூடுதலான தூரம் மற்றும் மாடிப்படிகளில் அதிக முறை நடக்கும் போதும் இந்த நோய் உயிர் பெறுகிறது.

பின்னர் மாற்றம் அடைந்த பாதங்களில் நடந்து நடந்து ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

அவை பிறகு புண்களை ஏற்படுத்துவதோடு அதில் தொற்று உண்டாகி பாத இழப்பில் போய் முடியும்.

இந்த நோய் வந்தவர்கள் ஒரு நிலநடுக்கம் வந்த கட்டிடத்தைப் போன்று அவர்களை கற்பனை செய்து கொள்ளலாம். அதில் மேலும் சிக்கல் ஏற்படுத்தாத வண்ணம் பாதத்தை காக்க வேண்டும்.

நீரிழிவு நரம்பு கீழ்வாதத்தின் ஆரம்ப அறிகுறிகள்:

நீரிழிவு நரம்பு கீழ்வாத நோயாளிகள் இதன் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதன் சிகிச்சையை விரைவில் தொடங்கலாம்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட பகுதி பின்வரும் அறிகுறிகளைக் காட்டும்:

1.குறிப்பிடப்பகுதி சிவத்து காணப்படும்.

2.வீக்கம் இருக்கும்.பாத அமைப்பில் மாற்றம்.

3.கூடுதல் இரத்தம் பாதம் பகுதியில் பாய்ச்சப்படும்.அதனால்

தொடும் போது வெப்பம் உணரப்படும்.

4.நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் வலி இருக்கலாம்.

நோயின் தாக்கத்தில் இருந்து மீளுதல் மற்றும் அதன் அபாயங்கள்.

முன்கூட்டியே நோயின் தன்மையை உணர்ந்து கவனித்தால் ஓரளவு கட்டுப்படுத்தி குணமாக்கும் வாய்ப்பு உள்ளது.

இதை விடுத்து சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், எலும்பு முறிவு மற்றும் பாதிக்கப்பட்ட புண்கள் காரணமாக பாத இழப்பிற்கு இது வழிவகுக்கும்.

இதனால் நோயாளிகள் ஒட்டுமொத்தமாக நடக்க முடியாமை மற்றும் குணமடையாத புண்கள் காரணமாக காலில் உள்ள பகுதிகளின் சிதைவுக்கு வழிவகுக்கும்.

நோயின் தாக்கத்தை தடுக்கும் வழிகள்:

எந்த நீரிழிவு நோயாளிகளும் இந்த நிலையைத் தடுக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒரு பாதவீக்கமானது சாதாரணமான கோளாறாகவும் இருக்கும்.மேலே கூறியுள்ளது போன்று கொடிய நோயாகவும் இருக்கும்.அதை பாத சிகிச்சை நிபுணர் விளக்கி சொல்ல முடியும்.

*கால் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகளைப் செய்து கொள்ள வேண்டும்.

*கால்களில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளதா? என சரிபார்க்க கால்களை தவறாமல் நீங்கள் பரிசோதிக்க வேண்டும்.

*எப்போதும் கால்களுக்கு சாக்ஸ் மற்றும் பொருத்தமான பாதணிகளை அணியுங்கள்.

*எப்போதும் கால்களின் தூய்மையாக பராமரிக்கவும்.

Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcarecentre@gmail.com

Saturday, October 31, 2020

புறநரம்பியல் நோயின் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்

  மூளை மனிதனுக்கு ஒரு முக்கிய உறுப்பாக உள்ளது. மனிதனின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்க உறுப்பாக மூளை விளங்குகிறது.

அதுபோலவே முதுகெலும்பும் மற்ற உயிரினங்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. முதுகெலும்பு உள்ள காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.அப்படி பட்ட மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளில் ஏற்படும் சேதம் பலவீனம், உணர்வின்மை மற்றும் கை, கால்களில் வலியை ஏற்படுத்துகிறது, இதை புற நரம்பியல் நோய்(peripheral neuropathy) என அழைக்கலாம்.

இது உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும். குறிப்பாக மூளை மற்றும் முதுகெலும்புகளிலிருந்து உணர்ச்சி தகவல்களை உடலின் மற்ற பகுதிகளுக்கு கடத்துவதற்கு புற நரம்பு மண்டலம் தான் உதவி செய்கிறது.

இந்த புற நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை முறையே

1. உணர்ச்சிகளைப் பெறும் உணர்ச்சி நரம்புகள்(sensory nerves)

2. தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் (விசை)மோட்டார் நரம்புகள்.(motor nerves)

3. இரத்த அழுத்தம், நீரிழிவு,வியர்வை மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்தும் தன்னியக்க நரம்புகள்(autonomic nervous system).

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறு வகையாக இருக்கும். இதனை கண்டறியக் கூடிய அறிகுறிகள் இனி காணலாம்.

அறிகுறிகள்:

1.நரம்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதமதப்பு, எரிச்சல்,ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு மற்றும் வலி ஏற்படுதல்

2.பலவீனமான தசைகளினால் விரல்கள் மடங்கி காணப்படும்.

5.கைகள் மற்றும் கால்களில் உணர்வு குறைந்து போதல் மற்றும் மாறுபட்ட உணர்வு

6.உடல் செயல்களில் ஒருங்கிணைப்பில் சிக்கல்கள்.

9.வியர்வை சரிவர சுரக்காமல் தோல் காய்ந்து காணப்படுதல் .

10.ஏற்ற இறக்கமான இரத்த அழுத்தம் மற்றும் அவ்வப்போது மயக்கம்.

இதனை சரி செய்ய உதவும் சிறப்பான மருத்துவ சிகிச்சை:

வழக்கமாக இந்த புற நரம்பியல் பாதிப்பானது நீரிழிவு நோய், தொழுநோய், பரம்பரை பிரச்சினைகள், நச்சுகளின் வெளிப்பாடு, தைராய்டு கோளாறு, மதுப்பழக்கம் மற்றும் சில காரணங்களால் ஏற்படுகிறது.

நம் சிகிச்சையின் முக்கிய குறிக்கோள் யாது எனில் புற நரம்பியல் நோயை ஏற்படுத்தும் நிலைமைகளை நிர்வகிப்பதும் அறிகுறிகளை ஆற்றுவதும் ஆகும்.

மருந்துகளை கொண்டு புற நரம்பியல் கோளாறினால் ஏற்படும் சிக்கல்களை குறைக்கலாம் .எனினும் இக்கட்டான சமயங்களில் அறுவை சிகிச்சை மற்றும் பிற நடைமுறைகளை மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

இவர்கள் தரும் மருந்துகள் நரம்பியல் வலி, கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மைக்கு சிகிச்சையளிக்க ஓரளவு உதவுகின்றன.

# நரம்பியல் நோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள்.

1.வலி நிவாரணி :

முதலில் மருத்துவர்கள், லேசான அறிகுறிகளுக்கு வலி நிவாரணிகளை பரிந்துரைப்பார்கள், மேலும் கடுமையான நிலைமைகளுக்கு இதனையே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இது(anti inflammatory) அழற்சி எதிர்ப்பு மருந்துகளாக இருக்கும்.

2.வலிப்புக்கு எதிரான எதிர்ப்பு மருந்துகள்:

கால்-கை வலிப்பு நோயிக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சில மருந்துகள் நரம்பு வலியையும் குறைக்கும். எனவே, இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த மருந்தினை எடுத்து கொள்ளும் போது சில சமயம் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

3.மனதளர்ச்சிக்கு எதிரான (ஆண்டிடிப்ரஸண்ட்ஸ்) மருந்துகள்

நமது மூளை மற்றும் முதுகெலும்பில் நிகழும் வேதியியல் செயல்முறைகளைத் தடுப்பதன் மூலம் வலிக்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதால் மருத்துவர்கள் இவ்வகையான ஆண்டிடிப்ரஸன் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

4. தோலில் தடவும் மேற்பூச்சு( topical gels)

சிகிச்சைகள்:

இச்சிகிச்சையில் எதிர் சக்தி உடைய கிரீம்கள் அல்லது களிம்புகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த கிரீம்கள் எரியும் உணர்வுகள், எரிச்சல் மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.அதனால் பழைய வலி, எரிச்சல் குறைய வாய்ப்புள்ளது.

5.TENS(Transcutaneous electrical nerve stimulation) எனும் மின் நரம்பு தூண்டுதல்:

TENS என்பது ஒரு மின் சாதனமாகும், இது பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கப்படும். எலெக்ட்ரோட் பட்டைகள் அறிகுறிகளின் கடத்தலைத் தடுக்க உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்புகளுக்கு குறைந்த மின்னழுத்த மின்னோட்டத்தை அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்வார்கள்.

6.அறுவை சிகிச்சை:

நரம்புகளின் மீதான அழுத்தம் காரணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்சினை க்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அரிதாகவே பரிந்துரைக்கலாம்.

7.உடல் உடற்பயிற்சி சிகிச்சை:

தசைகளில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்ய உடல் உடற்பயிற்சி சிகிச்சைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். உடல் உடற்பயிற்சி சிகிச்சைக்கு உட்படுத்தும்போது கை அல்லது கால் பிரேஸ்கள், ஒரு வாக்கர் அல்லது சக்கர நாற்காலி தேவைப்படும்.

மேலும் விபரங்களை அறிய மதுரையில் உள்ள கால் பராமரிப்பு மையத்தில், மருத்துவர்களை அணுகி புற நரம்பியல் நோய்க்கு சிறந்த சிகிச்சையை பற்றி அறியலாம்.


Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcarecentre@gmail.com

Friday, August 28, 2020

சர்க்கரை நோயும், பாத பாதுகாப்பும்

நம் கால் பாதம் குட்டியான 5 விரல்களையும் அதனுள் 26 எலும்புகளையும், 33 மூட்டுக்களையும், சுமாராக 100 தசைகளையும், 250,000 வேர்வை சுரப்பிகளை உள்ளடிக்கியது.


 ஒரு மனிதன் சுமாராகத் தன் வாழ்நாளில் 115,000 மைல்கள் நடக்கின்றான். நடப்பது ஒரு மிக சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது பாதங்களுக்கும், உடம்பிற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கிறது. 

உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் 56,000 பேர் சரியான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமல் சர்க்கரை நோயால்  பாதங்களை இழக்கின்றார்கள்.

உலகில் அதிகம் பேரை கொல்லும் நான்காவது வியாதி தான் இந்த
மதுமேகம், மேகநோய், இனிப்பு நீர்,நீரிழிவு என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய். இந்நோயால் எண்ணற்ற பாதிப்புகள் உச்சி முதல் பாதம் வரை ஏற்படுகிறது. இந்த நோயின் தாக்கமானது கண்கள்,இதயம், மூளை மற்றும் கால்களை பாதிக்கும்.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்தும் குறைந்துமாய் மாறி மாறி ஏற்படும் மாற்றத்தால் உடலில் உள்ள  உறுப்புகளில் பல வித பாதிப்புகள் உருவாகிறது.மேலும் இது குறிப்பாக பாதங்களின் நரம்புகளை செயல் இழக்கச் செய்கிறது. இதனை டயாபட்டிக் நியூரோபதி என்று கூறுகிறோம். 

சில நோயாளிகளுக்கு இரத்த குழாய் அடைப்பையும் சேர்த்து ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களும் உரிய கவனிப்பு இன்றி 

கடைசியில் காலை இழக்கும் அளவுக்கு அபாயத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.

சர்க்கரை நோயாளிகளின்      பாத பிரச்சினைகள் மூன்று வழிகளில் நிகழ்கிறது. அவை

1.நரம்புகள் பாதிக்கப்பட்டு உணர்வு குறைபாட்டினால் நோயாளிகள் நடக்கும் போது கூடுதல் அழுத்தம் கொடுத்து நடப்பார்கள்.அவ்வாறு நடக்கும் போது அழுத்தம் கொடுத்த இடங்களில் மட்டும் தோலில் காய்ப்பு ஏற்படுகிறது.அதையே நம்மில் பலர் கால் ஆணி என்போம்.

அந்த காய்ப்பு மீண்டும் மீண்டும் நோயாளிகள் நடக்கும் போது இன்னும் அதிகமாக வளர்ந்து அந்த காய்ப்புக்கு அடியில் உள்ள நல்ல சதை பகுதிகளை புண்ணாக்கி விடுகிறது.

பிறகு அந்த ஓட்டையான பகுதிகளில் கிருமி தொற்று ஏற்பட்டு விரல் மற்றும் பாதத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

2.இரத்தக் குழாய்களில் அதிகப்படியான கொழுப்பு படிந்து இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு புண் உண்டாகும் போது அவற்றை ஆற்றும் சக்தியை இழந்து விடுகிறார்கள்.

3.சர்க்கரை நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.இதன் காரணமாக பாதத்தில் காயம் மற்றும் புண் ஏற்பட்டு பின் கிருமிகள் புகுந்து அவை எளிதில்  அதிகரித்து வேகமாக பரவும்.

பாத பராமரிப்பிற்கான வழிகள்:

👍நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவர்களுக்கு தகுந்த அளவில் காலணிகளை  பயன்படுத்த வேண்டும். வெயில் நேரத்தில் காலணி இல்லாமல் நடக்கக்கூடாது.கட்டாயமாக காலணிகள் அணிய வேண்டும். அப்படி அணியாமல் நடக்கும் வேளையில் வெப்பத்தால் நாம் அறியாமலேயே பாதங்களில் கொப்பளங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

👍.கழிப்பறை சென்று வரும்போது பாதத்தின் விரல்களுக்கு இடையே சேரும் ஈரப்பதத்தை ஒரு சிறிய துணியைக் கொண்டு சரிவர உலர்த்த வேண்டும். இல்லையென்றால்  பூஞ்சை தொற்று ஏற்பட்டு புண் உண்டாக  காரணமாக அமைந்துவிடும். 

👍நீரழிவு நோயாளிகளுக்கான காலணிகள் சந்தையில் பெருமளவு கிடைக்கிறது. 

ஆனால் எது மிகவும் சிறந்தது என்று பாத சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை செய்து வாங்குவது நல்லது.

அந்த காலணிகளை அவர்கள் பயன்படுத்தும் போது பாத நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். பொதுவாக இவர்கள் மென்மையான தோல் மற்றும் காற்றோட்டம் உள்ள காலணிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. 

👍அதே போல் நீண்டதாக வளரும் கால் நகங்கள் உள்நோக்கி வளரலாம் இது உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். எனவே நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறிது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாக வெட்டி விடலாம்.

நாம் முகங்களை எவ்வாறு  சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ? அதே அளவுக்கு பாதத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதோடு மறக்காமல் காலணிகளை அணிந்து உங்கள் பாதங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது மிக மிக முக்கியம்.அத்தோடு மேற்கூறியவற்றையெல்லாம் நீங்கள் செய்யும் போது உங்கள் பாத பிரச்சனைகள் இருந்து நீங்கள் விடுதலை பெறலாம்.


சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பிரச்சினைகளுக்கென்றே சிறப்பு பயிற்சி எடுத்த பாத சிகிச்சை நிபுணரின் ஆலோசனை நன்மை பயக்கும்.

Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcarecentre@gmail.com

Wednesday, July 8, 2020

நீரிழிவு நோயாளிகள் பாதங்களை பாதுகாக்க வேண்டியது ஏன் அதிக முக்கியத்துவமாகிறது?

நம் உடலில் பாதங்கள்தான் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பகுதியாகும். உண்மையில் அவை, உடலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளாகும்.


நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பில் ஏற்படும் சேதத்தால், பாதங்களில் உணர்ச்சிகள் குறைந்து காணப்படும்.

இரு பாதங்களும் உடலில் 25 சதவீத எலும்புகள், 6 சதவீத தசை மற்றும் 18 சதவீத இணைப்புகளை உள்ளடக்கியவை.

எனினும், உடலின் மொத்த எடையையும் தாங்கக்கூடியவை பாதங்களே.

நீரிழிவு நோயாளிகளில், பெரும்பாலான பாத பிரச்னைகள், நாம் நடந்து நடந்தே வரவழைத்து கொள்கிறோம்.நடப்பதால் ஏற்படும் அழுத்தங்களால் முதலில் கால் ஆணி (காய்ச்சு போதல்) ஏற்படுகிறது. அதுவே புண் உண்டாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

உங்கள் பாதங்களை ஆரோக்கியமாகவும், நல்ல செய்பாட்டுடனும் வைத்திருப்பது எப்படி?

1. ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள். உங்கள் உடலில் எடை அதிகம் இருந்தால், அது உங்கள் கால் மற்றும் பாதங்களில்  வீக்கம், வேரிகோஸ் எனப்படும் இரத்த நாளங்களில் தேக்க நிலை மற்றும் சில மூட்டு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2. நடை பயிற்சியை காலை மற்றும் மாலை வேளையில் 20 நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அதிக நேரம் நடக்கக்கூடாது.இடையே பாதத்தை தாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதை தடுக்க வேண்டும்.

3.உங்கள் பாதங்களை ஈரப்பதத்துடனும், சுத்தமாகவும் வைத்திருங்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்கள் வறண்டு காணப்படும். பாதங்களுக்கு வியர்வை சுரப்பிகளை வழங்கும் தன்னியக்க நரம்புகள் சேதமடைவதே அதற்கு காரணமாகும். எனவே உங்களின் பாதங்களை சாதாரண தண்ணீரில் நன்றாக அடிக்கடி கழுவ வேண்டும். குளித்து முடித்தவுடனே, ஈரப்பதம் வழங்கும் மாய்சரைசரை தடவவும். ஏனெனில், அப்போதுதான் உடலில் இருக்கும் ஈரப்பதத்தை மாய்சரைசர் கிரீம் நீண்ட நேரத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும்.
பாதவெடிப்பையும் இதன் மூலம் தடுக்கலாம்.

அதே சமயம்    விரல்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை நன்றாக காயவைக்கவேண்டும்.அந்த இடங்களில் மட்டும் ஈரப்பதம் இருக்க கூடாது. அது பூஞ்சை தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அவற்றுக்கிடையே

தக்கவைத்துக்கொள்ளப்படும்  ஈரப்பதமும், வெப்பமான காலநிலையும் பூஞ்சைக்கு சிறந்த நண்பர்கள்.

4.நடைபயிற்சியின் போதோ,      விளையாட செல்லும்போதோ முறையான காலணிகளை அணிந்துகொள்ளுங்கள். விளையாட்டுக்களுக்கென பிரத்யேகமாக  பயன்படுத்தக்கூடிய ஷீக்களையே கண்டிப்பாக அணிந்துகொள்ளுங்கள்.

நீரிழிவு நோயாளிகள் காலணி வாங்கும்போது, மாலைவேளையில் கடைக்குச் செல்லுங்கள். ஏனெனில் அப்போதுதான் கால்களில் வீக்கம் இயற்கையில்  ஏற்படும்.பின்பு காலை அந்த வீக்கம் தானாகவே வற்றிவிடும். அதனால் பாதங்களுக்கு மாலையில்  பொருந்தக்கூடிய ஷீக்களையே வாங்கிக்கொள்ளுங்கள்.
அதுவே எல்லா நேரங்களிலும் உங்கள் பாதங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

வெறும் பாதங்களில் நடப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிறிய காயங்கள் அல்லது முள் குத்துவது கூட நரம்பியல் நீரிழிவு நோயாளிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.   

5.உங்கள் பாதங்களை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளுங்கள். உறங்கப்போவதற்கு முன்னரும், குளிக்கும்போதும் தினமும் உங்கள் பாதங்களை பரிசோதியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது, உங்கள் பாதங்களை பரிசோதித்து பார்ப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். பாதத்தில் தோல் உரிவது, சிவத்தல், வீக்கம், கொப்பளங்கள்,தோல் தடிமனாகி காய்ச்சு போதல் ஆகியவை ஏற்படுகிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பிரச்னைகளுக்கு சரியான சிகிச்சைகள் வழங்காவிட்டால், அது எதிர்காலத்தில் தீவிர சிக்கல்களை ஏற்படுத்தும்.

6.மேலும், காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க உங்கள் நகங்களை சுத்தப்படுத்தி, நேராக (மைனஸ் மாதிரி) வெட்டிக்கொள்ளுங்கள். இதன் மூலம் நகத்தில் தோன்றும் புண்களை குறைக்கலாம். நகத்திற்குள் புகுந்துகொள்ளும் அழுக்குகளால், பிற்காலத்தில் அவற்றை வெட்டுவதில் சிரமம் ஏற்படலாம். மிகப்பெரிய நகங்கள் மற்றும் வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும் பட்சத்தில் பாத சிகிச்சை மையத்தை அனுகி பாதுகாப்பாக நகங்களை வெட்டிக் கொள்ளலாம்.

மதுரை சர்க்கரை நோய் பாதசிகிச்சை மையம் ( Madurai FootCare centre), முழு பாத நோயறிதல் மற்றும் பாதசிகிச்சை சிறப்பு மருத்துவமனையாகும்.


பாதம் தொடர்பான உங்கள் அனைத்து பிரச்னைகளுக்கும், அவற்றிற்கான தீர்வுகளுக்கும் முன்பதிவு செய்துகொள்ளுங்கள். செல்பேசி எண் – 7395804082/ தொலைபேசி எண்- 04522589258

Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcentre@gmail.com

Friday, March 13, 2020

Stand firm with beauteous feet

The base foundation of a body is the feet, and taking care of this foundation is a must. Basic hygiene is required not only for the hands, hair, and skin but also for the feet. Generally, doctors would say that people need to practice right and proper foot care daily to avoid unnecessary infections and allergies. 

The foundation of mobility requires attention and care; otherwise, it could affect every work that has to be performed. Walking, daily chores, getting engaged in recreational activities, and much more will have to be compromised.  

Daily foot care tips 

The way people maintain oral hygiene daily, it is advised to practice good foot care. The primary care could be accomplished at one’s own house by following the below mentioned simple steps. 
  • Wash and dry the feet properly every day
  • Better to use mild soap and wash between the toes
  • Check daily for any cuts, sores or wounds, swelling, and infections 
  • Use body lotion, moisturizer, creams or petroleum jelly and use it between the toes as well 
  • Clean the shoes inside and outside and avoid wearing tight-fitting shoes 
  • Better to rotate the shoes so that the shoe will get dry and free out sweat and smell
  • Use clean socks, make sure to clean the used socks, and dry it properly
  • Trim toenails straight across and not on a curve, file down the sharp edges too
  • Use clean nail clippers 
  • Seek medical attention immediately for discoloured nails 
  • Do not apply nail polish on discoloured nails 
  • Avoid using flip-flops and flats as it does not provide enough arch support. 
It is recommended that everyone take good care of their feet. However, there are certain groups of people who should give extra concern about their feet because they would have high chances of developing foot problems. The group would include the elderly, diabetics, children, and athletes.  


For further details and information, visit Madurai Foot Care Centre, where doctors would assist everyone with all the essential requirements.


Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcentre@gmail.com