நீரிழிவு நரம்பு கீழ்வாதமானது, எலும்பு சிதைவின் ஓர் வகையே சார்கோட் நோய் (Charcot foot) என்று அழைக்கப்படுகிறது.
எலும்பு தேய்மானம் என்றும் வைத்து கொள்ளலாம்.
இது எந்த வகையான பிரச்சினைகளினாலும் நரம்பு பாதிப்பு வந்த நோயாளிகளுக்கு மட்டுமே வரக் கூடிய ஒரு கொடிய நோய்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பு காரணமாக கால்கள் மற்றும் பாதங்களில் உணர்வு குறைந்து காணப்படும்.
பாதங்களில் உள்ள எலும்புகள், மூட்டுகள் மற்றும் மென்மையான திசுக்களில் நரம்பு பாதிப்பால் இரத்த குழாய்களில் மாற்றம் ஏற்பட்டு அதனால் ஒரு சுனாமி பேரலை போன்று பாதங்களில் ஒரு வித அரிப்பு தன்மையை ஏற்படுத்தி எலும்புகள் தேய்மானம் அடையும்.
அவ்வாறு திடம் இல்லாத எலும்புகளில் முறிவு ஏற்பட்டு மற்றும் அதன் கட்டமைப்பு மாறி எலும்பு மாவு போல் மாற்றம் அடைந்து பாதம் கோணலாகி விடுகிறது.மேலும் இது பாதத்தின் வடிவத்தை நிரந்தரமாக மாற்றும் தன்மை கொண்டது.
நீண்ட நாட்கள் இருக்கும் நீரிழிவு நோயில் திடீர் என்று பாதங்கள் வழக்கத்தை விட கூடுதலான தூரம் மற்றும் மாடிப்படிகளில் அதிக முறை நடக்கும் போதும் இந்த நோய் உயிர் பெறுகிறது.
பின்னர் மாற்றம் அடைந்த பாதங்களில் நடந்து நடந்து ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.
அவை பிறகு புண்களை ஏற்படுத்துவதோடு அதில் தொற்று உண்டாகி பாத இழப்பில் போய் முடியும்.
இந்த நோய் வந்தவர்கள் ஒரு நிலநடுக்கம் வந்த கட்டிடத்தைப் போன்று அவர்களை கற்பனை செய்து கொள்ளலாம். அதில் மேலும் சிக்கல் ஏற்படுத்தாத வண்ணம் பாதத்தை காக்க வேண்டும்.
நீரிழிவு நரம்பு கீழ்வாதத்தின் ஆரம்ப அறிகுறிகள்:
நீரிழிவு நரம்பு கீழ்வாத நோயாளிகள் இதன் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதன் சிகிச்சையை விரைவில் தொடங்கலாம்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட பகுதி பின்வரும் அறிகுறிகளைக் காட்டும்:
1.குறிப்பிடப்பகுதி சிவத்து காணப்படும்.
2.வீக்கம் இருக்கும்.பாத அமைப்பில் மாற்றம்.
3.கூடுதல் இரத்தம் பாதம் பகுதியில் பாய்ச்சப்படும்.அதனால்
தொடும் போது வெப்பம் உணரப்படும்.
4.நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் வலி இருக்கலாம்.
நோயின் தாக்கத்தில் இருந்து மீளுதல் மற்றும் அதன் அபாயங்கள்.
முன்கூட்டியே நோயின் தன்மையை உணர்ந்து கவனித்தால் ஓரளவு கட்டுப்படுத்தி குணமாக்கும் வாய்ப்பு உள்ளது.
இதை விடுத்து சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், எலும்பு முறிவு மற்றும் பாதிக்கப்பட்ட புண்கள் காரணமாக பாத இழப்பிற்கு இது வழிவகுக்கும்.
இதனால் நோயாளிகள் ஒட்டுமொத்தமாக நடக்க முடியாமை மற்றும் குணமடையாத புண்கள் காரணமாக காலில் உள்ள பகுதிகளின் சிதைவுக்கு வழிவகுக்கும்.
நோயின் தாக்கத்தை தடுக்கும் வழிகள்:
எந்த நீரிழிவு நோயாளிகளும் இந்த நிலையைத் தடுக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒரு பாதவீக்கமானது சாதாரணமான கோளாறாகவும் இருக்கும்.மேலே கூறியுள்ளது போன்று கொடிய நோயாகவும் இருக்கும்.அதை பாத சிகிச்சை நிபுணர் விளக்கி சொல்ல முடியும்.
*கால் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகளைப் செய்து கொள்ள வேண்டும்.
*கால்களில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளதா? என சரிபார்க்க கால்களை தவறாமல் நீங்கள் பரிசோதிக்க வேண்டும்.
*எப்போதும் கால்களுக்கு சாக்ஸ் மற்றும் பொருத்தமான பாதணிகளை அணியுங்கள்.
*எப்போதும் கால்களின் தூய்மையாக பராமரிக்கவும்.
No comments:
Post a Comment