Wednesday, July 8, 2020

நீரிழிவு நோயாளிகள் பாதங்களை பாதுகாக்க வேண்டியது ஏன் அதிக முக்கியத்துவமாகிறது?

நம் உடலில் பாதங்கள்தான் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பகுதியாகும். உண்மையில் அவை, உடலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளாகும்.


நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பில் ஏற்படும் சேதத்தால், பாதங்களில் உணர்ச்சிகள் குறைந்து காணப்படும்.

இரு பாதங்களும் உடலில் 25 சதவீத எலும்புகள், 6 சதவீத தசை மற்றும் 18 சதவீத இணைப்புகளை உள்ளடக்கியவை.

எனினும், உடலின் மொத்த எடையையும் தாங்கக்கூடியவை பாதங்களே.

நீரிழிவு நோயாளிகளில், பெரும்பாலான பாத பிரச்னைகள், நாம் நடந்து நடந்தே வரவழைத்து கொள்கிறோம்.நடப்பதால் ஏற்படும் அழுத்தங்களால் முதலில் கால் ஆணி (காய்ச்சு போதல்) ஏற்படுகிறது. அதுவே புண் உண்டாவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

உங்கள் பாதங்களை ஆரோக்கியமாகவும், நல்ல செய்பாட்டுடனும் வைத்திருப்பது எப்படி?

1. ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள். உங்கள் உடலில் எடை அதிகம் இருந்தால், அது உங்கள் கால் மற்றும் பாதங்களில்  வீக்கம், வேரிகோஸ் எனப்படும் இரத்த நாளங்களில் தேக்க நிலை மற்றும் சில மூட்டு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2. நடை பயிற்சியை காலை மற்றும் மாலை வேளையில் 20 நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அதிக நேரம் நடக்கக்கூடாது.இடையே பாதத்தை தாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதை தடுக்க வேண்டும்.

3.உங்கள் பாதங்களை ஈரப்பதத்துடனும், சுத்தமாகவும் வைத்திருங்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்கள் வறண்டு காணப்படும். பாதங்களுக்கு வியர்வை சுரப்பிகளை வழங்கும் தன்னியக்க நரம்புகள் சேதமடைவதே அதற்கு காரணமாகும். எனவே உங்களின் பாதங்களை சாதாரண தண்ணீரில் நன்றாக அடிக்கடி கழுவ வேண்டும். குளித்து முடித்தவுடனே, ஈரப்பதம் வழங்கும் மாய்சரைசரை தடவவும். ஏனெனில், அப்போதுதான் உடலில் இருக்கும் ஈரப்பதத்தை மாய்சரைசர் கிரீம் நீண்ட நேரத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும்.
பாதவெடிப்பையும் இதன் மூலம் தடுக்கலாம்.

அதே சமயம்    விரல்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை நன்றாக காயவைக்கவேண்டும்.அந்த இடங்களில் மட்டும் ஈரப்பதம் இருக்க கூடாது. அது பூஞ்சை தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அவற்றுக்கிடையே

தக்கவைத்துக்கொள்ளப்படும்  ஈரப்பதமும், வெப்பமான காலநிலையும் பூஞ்சைக்கு சிறந்த நண்பர்கள்.

4.நடைபயிற்சியின் போதோ,      விளையாட செல்லும்போதோ முறையான காலணிகளை அணிந்துகொள்ளுங்கள். விளையாட்டுக்களுக்கென பிரத்யேகமாக  பயன்படுத்தக்கூடிய ஷீக்களையே கண்டிப்பாக அணிந்துகொள்ளுங்கள்.

நீரிழிவு நோயாளிகள் காலணி வாங்கும்போது, மாலைவேளையில் கடைக்குச் செல்லுங்கள். ஏனெனில் அப்போதுதான் கால்களில் வீக்கம் இயற்கையில்  ஏற்படும்.பின்பு காலை அந்த வீக்கம் தானாகவே வற்றிவிடும். அதனால் பாதங்களுக்கு மாலையில்  பொருந்தக்கூடிய ஷீக்களையே வாங்கிக்கொள்ளுங்கள்.
அதுவே எல்லா நேரங்களிலும் உங்கள் பாதங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

வெறும் பாதங்களில் நடப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிறிய காயங்கள் அல்லது முள் குத்துவது கூட நரம்பியல் நீரிழிவு நோயாளிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.   

5.உங்கள் பாதங்களை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளுங்கள். உறங்கப்போவதற்கு முன்னரும், குளிக்கும்போதும் தினமும் உங்கள் பாதங்களை பரிசோதியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது, உங்கள் பாதங்களை பரிசோதித்து பார்ப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். பாதத்தில் தோல் உரிவது, சிவத்தல், வீக்கம், கொப்பளங்கள்,தோல் தடிமனாகி காய்ச்சு போதல் ஆகியவை ஏற்படுகிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பிரச்னைகளுக்கு சரியான சிகிச்சைகள் வழங்காவிட்டால், அது எதிர்காலத்தில் தீவிர சிக்கல்களை ஏற்படுத்தும்.

6.மேலும், காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க உங்கள் நகங்களை சுத்தப்படுத்தி, நேராக (மைனஸ் மாதிரி) வெட்டிக்கொள்ளுங்கள். இதன் மூலம் நகத்தில் தோன்றும் புண்களை குறைக்கலாம். நகத்திற்குள் புகுந்துகொள்ளும் அழுக்குகளால், பிற்காலத்தில் அவற்றை வெட்டுவதில் சிரமம் ஏற்படலாம். மிகப்பெரிய நகங்கள் மற்றும் வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும் பட்சத்தில் பாத சிகிச்சை மையத்தை அனுகி பாதுகாப்பாக நகங்களை வெட்டிக் கொள்ளலாம்.

மதுரை சர்க்கரை நோய் பாதசிகிச்சை மையம் ( Madurai FootCare centre), முழு பாத நோயறிதல் மற்றும் பாதசிகிச்சை சிறப்பு மருத்துவமனையாகும்.


பாதம் தொடர்பான உங்கள் அனைத்து பிரச்னைகளுக்கும், அவற்றிற்கான தீர்வுகளுக்கும் முன்பதிவு செய்துகொள்ளுங்கள். செல்பேசி எண் – 7395804082/ தொலைபேசி எண்- 04522589258

Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcentre@gmail.com

No comments:

Post a Comment