Saturday, October 31, 2020

புறநரம்பியல் நோயின் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்

  மூளை மனிதனுக்கு ஒரு முக்கிய உறுப்பாக உள்ளது. மனிதனின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்க உறுப்பாக மூளை விளங்குகிறது.

அதுபோலவே முதுகெலும்பும் மற்ற உயிரினங்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. முதுகெலும்பு உள்ள காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.அப்படி பட்ட மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளில் ஏற்படும் சேதம் பலவீனம், உணர்வின்மை மற்றும் கை, கால்களில் வலியை ஏற்படுத்துகிறது, இதை புற நரம்பியல் நோய்(peripheral neuropathy) என அழைக்கலாம்.

இது உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும். குறிப்பாக மூளை மற்றும் முதுகெலும்புகளிலிருந்து உணர்ச்சி தகவல்களை உடலின் மற்ற பகுதிகளுக்கு கடத்துவதற்கு புற நரம்பு மண்டலம் தான் உதவி செய்கிறது.

இந்த புற நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை முறையே

1. உணர்ச்சிகளைப் பெறும் உணர்ச்சி நரம்புகள்(sensory nerves)

2. தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் (விசை)மோட்டார் நரம்புகள்.(motor nerves)

3. இரத்த அழுத்தம், நீரிழிவு,வியர்வை மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்தும் தன்னியக்க நரம்புகள்(autonomic nervous system).

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறு வகையாக இருக்கும். இதனை கண்டறியக் கூடிய அறிகுறிகள் இனி காணலாம்.

அறிகுறிகள்:

1.நரம்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதமதப்பு, எரிச்சல்,ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு மற்றும் வலி ஏற்படுதல்

2.பலவீனமான தசைகளினால் விரல்கள் மடங்கி காணப்படும்.

5.கைகள் மற்றும் கால்களில் உணர்வு குறைந்து போதல் மற்றும் மாறுபட்ட உணர்வு

6.உடல் செயல்களில் ஒருங்கிணைப்பில் சிக்கல்கள்.

9.வியர்வை சரிவர சுரக்காமல் தோல் காய்ந்து காணப்படுதல் .

10.ஏற்ற இறக்கமான இரத்த அழுத்தம் மற்றும் அவ்வப்போது மயக்கம்.

இதனை சரி செய்ய உதவும் சிறப்பான மருத்துவ சிகிச்சை:

வழக்கமாக இந்த புற நரம்பியல் பாதிப்பானது நீரிழிவு நோய், தொழுநோய், பரம்பரை பிரச்சினைகள், நச்சுகளின் வெளிப்பாடு, தைராய்டு கோளாறு, மதுப்பழக்கம் மற்றும் சில காரணங்களால் ஏற்படுகிறது.

நம் சிகிச்சையின் முக்கிய குறிக்கோள் யாது எனில் புற நரம்பியல் நோயை ஏற்படுத்தும் நிலைமைகளை நிர்வகிப்பதும் அறிகுறிகளை ஆற்றுவதும் ஆகும்.

மருந்துகளை கொண்டு புற நரம்பியல் கோளாறினால் ஏற்படும் சிக்கல்களை குறைக்கலாம் .எனினும் இக்கட்டான சமயங்களில் அறுவை சிகிச்சை மற்றும் பிற நடைமுறைகளை மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

இவர்கள் தரும் மருந்துகள் நரம்பியல் வலி, கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மைக்கு சிகிச்சையளிக்க ஓரளவு உதவுகின்றன.

# நரம்பியல் நோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள்.

1.வலி நிவாரணி :

முதலில் மருத்துவர்கள், லேசான அறிகுறிகளுக்கு வலி நிவாரணிகளை பரிந்துரைப்பார்கள், மேலும் கடுமையான நிலைமைகளுக்கு இதனையே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இது(anti inflammatory) அழற்சி எதிர்ப்பு மருந்துகளாக இருக்கும்.

2.வலிப்புக்கு எதிரான எதிர்ப்பு மருந்துகள்:

கால்-கை வலிப்பு நோயிக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சில மருந்துகள் நரம்பு வலியையும் குறைக்கும். எனவே, இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த மருந்தினை எடுத்து கொள்ளும் போது சில சமயம் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

3.மனதளர்ச்சிக்கு எதிரான (ஆண்டிடிப்ரஸண்ட்ஸ்) மருந்துகள்

நமது மூளை மற்றும் முதுகெலும்பில் நிகழும் வேதியியல் செயல்முறைகளைத் தடுப்பதன் மூலம் வலிக்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதால் மருத்துவர்கள் இவ்வகையான ஆண்டிடிப்ரஸன் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

4. தோலில் தடவும் மேற்பூச்சு( topical gels)

சிகிச்சைகள்:

இச்சிகிச்சையில் எதிர் சக்தி உடைய கிரீம்கள் அல்லது களிம்புகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த கிரீம்கள் எரியும் உணர்வுகள், எரிச்சல் மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.அதனால் பழைய வலி, எரிச்சல் குறைய வாய்ப்புள்ளது.

5.TENS(Transcutaneous electrical nerve stimulation) எனும் மின் நரம்பு தூண்டுதல்:

TENS என்பது ஒரு மின் சாதனமாகும், இது பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கப்படும். எலெக்ட்ரோட் பட்டைகள் அறிகுறிகளின் கடத்தலைத் தடுக்க உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்புகளுக்கு குறைந்த மின்னழுத்த மின்னோட்டத்தை அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்வார்கள்.

6.அறுவை சிகிச்சை:

நரம்புகளின் மீதான அழுத்தம் காரணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்சினை க்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அரிதாகவே பரிந்துரைக்கலாம்.

7.உடல் உடற்பயிற்சி சிகிச்சை:

தசைகளில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்ய உடல் உடற்பயிற்சி சிகிச்சைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். உடல் உடற்பயிற்சி சிகிச்சைக்கு உட்படுத்தும்போது கை அல்லது கால் பிரேஸ்கள், ஒரு வாக்கர் அல்லது சக்கர நாற்காலி தேவைப்படும்.

மேலும் விபரங்களை அறிய மதுரையில் உள்ள கால் பராமரிப்பு மையத்தில், மருத்துவர்களை அணுகி புற நரம்பியல் நோய்க்கு சிறந்த சிகிச்சையை பற்றி அறியலாம்.


Blog Reviewed By: Dr.G.Saravanakumar
Mail Us @ maduraifootcarecentre@gmail.com

No comments:

Post a Comment